taakvellakovil@gmail.com

Scroll News Bar

பல்வேறு ஆசிரியர்களுக்கு பலவருடங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையினை பெற தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர்போராட்டம்- விரிவான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் விரைவில் Flying Bee தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலமாக தேவையற்ற மாற்றுப்பணி உத்தரவுகள் இரத்து செய்யப்பட்டன. *_ _* *_ _* வெள்ளகோவில் ஒன்றிய நமது அமைப்பு உறுப்பினர்களுக்கு கூட்டணி டைரிகள் மற்றும் நாட்காட்டிகள் வழங்கப்படவுள்ளன. *_ _* *_ _* நாளை 27.03.2013 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,வெள்ளகோவில் ஒன்றியம் வெற்றிக்கனியை பறிக்க வாழ்த்துகிறது

Wednesday 10 April 2013

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவியுயர்வு கிடையாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவியுயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்கறிஞ்சர் திரு.சங்கரன் அவர்கள் வாதாடினார், இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு.எலிட் தர்மா ராவ் மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட "இரட்டை பட்டங்களுக்கு பதிவியுயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவியுயர்வு கலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவியுயர்வு வாய்ப்பு ஏற்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: TeacherTn

ஏழாவது ஊதியக்குழு - மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் உத்தேச ஊதிய விபரம்

ஏழாவது ஊதியக்குழுவில் எதிர்பார்க்கப்படும் உத்தேச மதிப்பிலான ஊதியக்கட்டு - ஊதிய விபரம்


SIXTH CPC PAY STRUCTURE
PROJECTED PAY STRUCTURE FOR NEXT (VII) PAY COMMISSION
Name of Pay Band/ ScaleCorresponding Pay BandsCorresponding Grade PayEntry Grade +band pay
Projected entry level pay using uniform multiplying factor` 3’
Band PayGrade PayEntry Pay
PB-15200-202001800700015600-60600540021000
PB-15200-202001900773015600-60600570023190
PB-15200-202002000846015600-60600600025380
PB-15200-202002400991015600-60600720029730
PB-15200-2020028001136015600-60600840034080
PB-29300-3480042001350029900-1044001260040500
PB-29300-3480046001714029900-1044001380051420
PB-29300-3480048001815029900-1044001440054450
PB-315600-3910054002100029900-1044001620063000
PB-315600-3910066002553046800-1173001980076590
PB-315600-3910076002950046800-1173002280088500
PB-437400-67000870046100112200-2010026100138300
PB-437400-67000890049100112200-2010026700147300
PB-437400-670001000053000112200-2010030000159000
HAG67000- (ann increment @ 3%) -79000Nil


201000
HAG+ Scale75500- (ann increment @ 3%) -80000Nil


226500
Apex Scale80000 (Fixed)Nil


240000
Cab. Sec.




நன்றி : TeacherTN
90000 (Fixed)Nil


270000





மே-2013 மாதத்தில் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், மே மாதம் முதல் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று, அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பயிலுவதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த எடுத்துக் கூற வேண்டும் என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக்கப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டம், பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில் மே மாதம் பி.எட்., உள்ளிட்ட உயர் கல்வி தேர்வுகள் வருவதால், அவற்றை படிக்கும் ஆசிரியர்களின் கல்வி பாதிக்கும் எனவும், ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மே மாதம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வரவேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி பள்ளிக்கு செல்லும் ஆசிரியர், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் சலுகை விவரம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில், மே மாதம் உயர்கல்வி தேர்வு உள்ளிட்டவை இருக்கும். உயர்கல்வி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணி இருந்தால், அவர்களது கல்வி பாதிக்கும். எனவே, உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு இதில் விதி விலக்கு அளிக்க வேண்டும். அல்லது மே மாத இறுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால், எவ்வித பிரச்னையும் இருக்காது, என்றனர்.

நன்றி : TeacherTN

Tuesday 26 March 2013

சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட் தொடர்பான இயக்குனர் கடிதம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் (இரண்டாண்டு) பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
இயக்குனரின் செயல்முறைகள் கடிதம் பதிவிறக்க இங்கே சுட்டவும் 

நன்றி : TeacherTN

Monday 25 March 2013

ஆற்றிய பணிக்கு அகம் மகிழ்விக்கும் விழா

”வாழ்நாள் கல்விச்சிந்தனையாளர் அப்துல் மஜீத்” விருது


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம் சார்பில் முத்தூர் ஊ.ஒ.ந.பள்ளி, இடைநிலை ஆசிரியை திருமதி.செ.கிரேஸி அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா 22.03.2013 அன்று துரை ராமசாமி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாலை மணி 5 க்கு துவங்கியது. முத்தூர் பேரூராட்சித்தலைவர் திருமதி. செல்வநாயகி முத்துக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைச் துவக்கி வைத்தார். விழாவில் வெள்ளகோவில் நகராட்சித்தலைவர் திரு. கந்தசாமி அவர்களும், முத்தூர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு. முத்துக்குமார் அவ்ர்களும், நமது கூட்டணியின் மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக் கலந்து கொண்டு விழாப்பேரூரை ஆற்றினர். விழாவில் நடுப்பாளையம் பள்ளித்தலைமையாசிரியர் திரு. பெரியசாமி அவர்களும், எல்.கே.சி. நகர் பள்ளித்தலைமையாசிரியர் திரு.ஞா. சின்னப்பராஜ், வெள்ளகோவில் உதவித்தொடக்கக்கல்வி முன்னாள் பணியாளர்கள், திருமதி. தாயம்மா மற்றும் திருமதி.மேரி ராஜாமணி அவர்களும் சிறப்பிக்கப்பட்டனர். வெள்ளகோவில் வட்டார வளமைய முன்னாள் மேற்பார்வையாளர் திரு. பெரியசாமி, துரைராமசாமி உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு. மரிய லூயிஸ், உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் திருமதி அரு.பொன்னழகு போன்றோர் திருமதி.கிரேஸி ஆசிரியைக்கு புகழாரம் சூட்டினர். ஆசிரியையின் முன்னாள் மாணவர்களாகிய குறுக்கத்தி பள்ளி தலைமையாசிரியர். திரு. தமிழ்ச்செல்வன் அவர்களும், மங்கலப்பட்டி பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.கார்த்திகேயனும் ஆசிரியையிடம் படித்த நாட்களை நினைவு கூறினர்.  விழாவினை மோளக்கவுண்டன்வலசு இடைநிலை ஆசிரியர் திரு.ஜெயபாலன் மற்றும் செலம்பகவுணடன்வலசு தலைமையாசிரியர் திரு.கோ.பிரபாகர் தொகுத்துவழங்கினர். விழா ஏற்பாடுகளை தென்னங்கரைபாளையம் பட்டதாரி ஆசிரியர் திரு. சிவசங்கர் அவர்களும், அய்யம்பாளையம் பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.ஹரிஹரன் அவர்களும் செய்திருந்தனர்.

Thursday 21 March 2013

CCEக்கு புதிய மென்பொருள் அறிமுகம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம் 1 முதல் 8 வகுப்புகளுக்கு CCE எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது 9ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் வகுப்பாசிரியர் / பாட ஆசிரியர் / மாணவர் திரள் பதிவேடு/ இணை செயல்பாடுகள் பதிவேடு என பல பதிவேடுகள் பராமரிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். ஆசிரியர்களின் வேலை பளுவை குறைத்து எளிமையாக்க அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இம்மென்பொருள் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம் FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி : TeacherTn

Wednesday 20 March 2013

ஊதிய மாற்றம் வருமா?

01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு கடிதஎண்29829/ஊ.கு.தீ.பி.2012-2/நாள்18.02.2013 பதிவிறக்கம் செய்ய